உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 20 ஏப்ரல், 2025

உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு!

உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி  ஆசிரியர் கழகத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு!
வேலூர் , ஏப் 20 -

வேலூர் மாவட்டம் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் வேலூர் மாவட்டத்திற்கான தேர்தல் இன்று வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது.  மாவட்ட தலைவராக செல்வகுமார், செயலாளராக தனசேகர் உள்ளிட்டோர்  தேர்தெடுக் கப்பட்டனர்.திருப்பத்தூர் மாவட்ட தலைவர் தேசிங்குராஜன் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். மாநில தேர்தல் ஆணையர்  பி. தாண்டவராயன்  மாநில பொதுச் செயலாளர் சி.ஜெயக் குமார், மாநில சட்ட செயலாளர் ஜெ. காந்தி மற்றும் மாவட்ட ஆலோசகர் ஏ.திருஞானசம்பந்தம் ஆகிய அனை வரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தேர்தல் நடத்தினர். பின்னர் பின்வரும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.மாவட்ட தலைவராக எம்.எஸ். செல்வகுமார், மாவட்ட செயலாளராக கே.தனசேகர், பொருளாளராக என்.ராஜ் குமார் மகளிர் அணி செயலர்களாக ம.யசோதா, இரா.நிர்மலா, துணைத் தலைவர்களாக பி.ஞானசேகரன், எம்.உலகநீதி, வி.பார்த்திபன், இணை செயலாளர்களாக டி.கிருஷ்ணன், பி.அஜய்கோஷ்குமார், எம்.ஜி.சங்கர், செய்தித்தொடர்பு செயலாளராக கே.சங்கர், தலைமை நிலைய செயலா ளராக கே.ரகுராமன், சட்டச் செயலாளராக எஸ்.திவ்யபிரபு,   ஆகியோர் தேர்ந்தெடுக் கப்பட்டனர்.மாநில பொதுக்குழு உறுப் பினர்களாக சி.சிவக்குமார், வி.கோகுலகிருஷ்ணன், வி.பாபு, ஆர்.இந்திராகாந்தி, வி.எஸ்.சத்யா, ஆர்.முத்துக்குமரன், வி.எம்.ராஜா, எஸ்கெஜராஜ்  ஆகியோர் தேர்தெடுக்கப் பட்டனர்.தேர்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற் குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் சங்க மாநில தேர்தல் ஆணையர்  பி. தாண்டவராயன்  மாநில பொதுச் செயலாளர் சி.ஜெயக் குமார், ஆகியோர்  வாழ்த்துகளை தெரிவித்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad