கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் வீட்டின் படிக்கட்டில் அமர்ந்த மூன்று வயது பெண் குழந்தை கடித்து குதறிய தெரு நாய் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி - இதேபோன்று நாகர்கோவில் அருகே மாநகராட்சி ஊழியர் சென்ற இரு சக்கர வாகனத்தின் குறுக்கே நாய் பாய்ந்ததால் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே மாநகராட்சி ஊழியர் சுடலைமணி என்பவர் பலியானார்.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடந்த ஜனவரி,பிப்ரவரி ஆகிய இரு மாதங்களில் மட்டும் 4533 பேர்கள் நாய்கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.இது கடந்த நான்கு ஆண்டுகளில் 52 ஆயிரம் பேர் நாய் கடிக்கு மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் அதிர்ச்சி தகவல் -இதற்கு சமூக ஆர்வலர்கள் அரசு சுகாதார நிலையங்களில் நாய் கடிக்கு மருந்து இருப்பு இல்லை என குற்றச்சாட்டு.
கன்னியாகுமரி மாவட்ட திருவட்டார் தாலுகா செய்தியாளர்,
அஸ்வின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக