ஆர் ஐ சி டி கல்வி நிறுவன சார்பில் ரத்ததானம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம்!
வேலூர் , ஏப் 08 -
வேலூர் மாவட்டம் ஆர்.ஐ.சி.டி கல்வி நிறுவனம், வேலூர் ரத்தம் மையம், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, காட்பாடி ஜங்ஷன் லயன் சங்கம் இணைந்து காட்பாடி காந்தி நகரில் ரத்த தான முகாம் மற்றும் இலவச கண்பரிசோதனை முகாம் நடைபெற்றது.இம்முகாமிற்கு கல்வி நிறுவன இயக்குனர் முனைவர் கே.எஸ். அஷ்ரப் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக உதவும் உள்ளங்கள் அறக்கட்டளையின் தலைவர் இரா சந்திர சேகரன் இந்தியன் ரெட் கிராஸ் சங்கத் தின் காட்பாடி வட்ட அவைத்தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன், உலக தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் முனைவர் சி பி ஜே சி ஆகியோர் பங்கேற்று முகாமினை தொடக்கி வைத்தனர்.
லயன் சங்க மண்டல தலைவர் வி காமராஜ் லயன் சங்க வட்டாரத் தலைவர் டி. செல்வமணி மாவட்ட தலைவர் எம் திலகர் செயலாளர் எஸ்.கருப்பசாமி சேவகன் அறக்கட்டளை இயக்குனர் ஆர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று பேசினர். வேலூர் ரத்த மையத்தின் இயக்குனர் சிவன் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் ஒருங்கிணைப் பாளர் கபில்தேவ், அகில் ரத்த பரிசோத னை மைய மேலாளர் என்.பிரசாந்த் சாந்தி கல்வி அறக்கட்டளையின் இயக்குனர் தமிழரசன் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக