மானாமதுரை வைகை ஆற்று மேம்பால சாலையில் போக்குவரத்து எச்சரிக்கை பதாகைகளை நிறுவ பொதுமக்கள் வலியுறுத்தல். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஏப்ரல், 2025

மானாமதுரை வைகை ஆற்று மேம்பால சாலையில் போக்குவரத்து எச்சரிக்கை பதாகைகளை நிறுவ பொதுமக்கள் வலியுறுத்தல்.

 

IMG-20250402-WA0166

மானாமதுரை வைகை ஆற்று மேம்பால சாலையில் போக்குவரத்து எச்சரிக்கை பதாகைகளை நிறுவ பொதுமக்கள் வலியுறுத்தல்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிவகங்கை - மானாமதுரை பழைய பேருந்து நிலையத்தை இணைக்கும் வைகை ஆற்று மேம்பால பிரதான சாலையில் மாலை நேரங்களில் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்திவிட்டு நடை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக போக்குவரத்து இடையூறு ஏற்படும் சூழ்நிலை நிறைவு வருகிறது. மேலும் எதிர்பாராத விதமாக அவசர தேவைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போதிய விழிப்புணர்வின்மையின் காரணமாக பொதுமக்கள் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு "வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை", "வாகனங்களை நிறுத்தினால் அபதாரம் விதிக்கப்படும்" என்பது போன்ற போக்குவரத்து சாலை விதிகளின்படி எச்சரிக்கை பதாகைகளை நிறுவ சமூக ஆர்வலர்கள், பொதுநல தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad