கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம்.வரும் 28 ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.
சித்திரை சபை மண்டபத்தில் வைத்து நடராஜ மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் செய்த பிறகு 18 ஊர் பிடாகைகள், ஊர் தலைவர்கள் வட்ட பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சிவபிரசாத், தெற்கு மண் மடம் ஸ்தானிகர் ஆதிசேஷன் நம்பூதிரி தலைமையில்,
குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன், இணை ஆணையர் பழனிதுளசி தரன் நாயர், ராஜேஷ், சுந்தரி அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுஷியா, கோயில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்காளர் கண்ணன் மற்றும் பக்தர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு திருவிழாவுக்கான பத்திரிகைக்கு மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் 9 ம் நாள் திருவிழாவான, மே மாதம் 6 ம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான மே 7 ம் தேதி இரவு 8 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், அறங்காவலர் குழுவினர், பக்தர்களும் இணைந்து செய்தனர்
தமிழககுரல் செய்திகளுக்காககன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர்,
தமிழன்
T.ராஜேஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக