கன்னியாகுமரி மாவட்டம், இனயம் புத்தன்துறை ஊராட்சியில் அடிப்படை வசதிகள் மற்றும் புதிய வீடு கட்டுவதற்கு ப்ளான் அப்ரூவல் வழங்குதல் வீட்டு வரி விதிப்பு செய்வது போன்ற மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் பல்வேறு இடையூறுகளை திமுக ஒன்றிய செயலாளர் கோபால் என்பவரும்
அதிமுகவிலிருந்து திமுகவிற்கு கட்சி தாவிய லாசர், கிருஷ்ணன் மற்றும் காங்கிரஸிலிருந்து திமுகாவிற்கு கட்சி மாறிய கான் என்பவர்கள் ஒன்றிணைந்து மீனவ மக்களுக்கு எதிராகவும் வளர்ச்சியினை தடுக்கும் நோக்கில் தொடர்ந்து பல்வேறு இடையூறுகளை செய்து வருகின்றனர்
அதுமட்டுமல்லாமல் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் 3233 என்ற வழக்கும் தொடுத்துள்ளனர்.
ஊராட்சியில் 4067 கட்டிடங்கள் (வீடுகள் கடைகள் மற்றும் நிறுவனங்கள்) உள்ளது இதில் சுமார் 2500-க்கு மேற்பட்ட வீடுகள் கீழ் குளம் பேரூராட்சி எல்கைபகுதியில் அமைந்துள்ளது இதனை அபகரிப்பு செய்து ஓட்டு வாங்கி தொடர்ந்து பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கீழ்குளம் திமுக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
இதனை தடுக்கும் நோக்கில் நமது ஊராட்சியில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
இதன் ஒருபகுதியாக ஊராட்சியில் உள்ள 1680 நபர்கள் 16/7/2024 அன்று மிடாலம் ஊராட்சியில் வைத்து நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் இனயம் புத்தன்துறை வருவாய் கிராமத்தின் எல்கையை இனயம்புத்தன்துறை ஊராட்சியின் எல்கையாக வரையறை செய்து தரக்கேட்டு மனு கொடுத்தனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை 10-00 மணிக்கு ஊராட்சி அலுவலகம் முன்பு ஹெலன்நகர் ஊர் மக்கள் தொழில் முடக்கம் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் வி டி ஒ அனிதா கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக கூறி பேச்சுவார்த்தை நடத்தி ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது
இந்த ஆர்ப்பாட்டத்தில்.ஹெலன் நகர் பங்குதந்தை ஜெனிஸ், ஹெலன் நகர் பங்கு பேரவை செயலாளர் ஆன்ட்ரூஸ், மற்றும் கவுன்சிலர் விஜிலா, ஜோர்தான், ஜார்ஜ்ராபின்சன்,
நெய்தல் இயக்கம் பெர்லின், விமல்ராஜ், ஜார்டன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர். ஜெ.ராஜேஷ்கமல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக