நெமிலி ஊராட்சி ஒன்றியம் கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கான பணி ஆணை வழங்கும் விழா!
ராணிப்பேட்டை , ஏப் 28 --
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் 2025-2026ஆம் நிதியாண் டிற்கான கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 369 பயனாளிகளுக்கு தலா ஒரு வீட்டிற்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில், வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி, நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங் கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு கலந்துகொண்டு, திட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான வேலை உத்தர வினை வழங்கி பேசியதாவது, தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டு மக்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார். ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்று உயர்ந்த நோக்கத்தில் சிறப்பான நிர்வாகத்தை அளித்து வருகிறார். மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் திட்டங் களை செயல்படுத்தி வருகிறார். மேலும் கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளி கள் வீடு கட்டும் பணியினை விரைந்து முடிக்க வேண்டுமென கேட்டுக் கொண் டார். இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.ஜெயஶ்ரீ, ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக