பேராவூரணி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் தொழிலாளர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு மற்றும் மகளிர் விடியல் பயணம் நகரப் பேருந்து இயக்கம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

பேராவூரணி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் தொழிலாளர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு மற்றும் மகளிர் விடியல் பயணம் நகரப் பேருந்து இயக்கம்.

IMG-20250406-WA0234

 பேராவூரணி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் தொழிலாளர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு மற்றும் மகளிர் விடியல் பயணம் நகரப் பேருந்து இயக்கம்.


தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி,  போக்குவரத்துத்துறை அமைச்சர் வழிக்காட்டுதலின் படி, அரசுப் போக்குவரத்துக் கழக பேராவூரணி கிளையில், தொழிலாளர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு விழா நடைபெற்றது. 


தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் பேராவூரணி கிளையில் இயங்கி வரும் தடம் எண். A.10-க்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் பேருந்திற்கு பதிலாக புதிய (BS VI) மகளிர் விடியல் பயணம் பேருந்து இயக்கம் மற்றும் பேராவூரணி கிளை தடம் எண். 344 புறநகர் தடப்பேருந்தை, மகளிர் விடியல் பயணம் நகரப் பேருந்தாக (A.4) பேராவூரணி பட்டுக்கோட்டை (வழி) கள்ளங்காடு, குண்டாமரைக்காடு, முனுமாக்காடு, குருவிக்கரம்பை பள்ளிக்கூடம் வழித்தடத்தில் இயக்கம் துவக்க விழா நடைபெற்றது. 


தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி,  பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் ஆகியோர் நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகித்தனர்.


விழாவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டல பொது மேலாளர் எஸ்.ஸ்ரீதரன், துணை மேலாளர் (வணிகம் ஏ.தமிழ்ச்செல்வன், போக்குவரத்துக்கழக உதவி பொறியாளர்கள் சங்கரன், திருஞானசம்பந்தம், பேராவூரணி கிளை மேலாளர் கே.மகாலிங்கம்,  ஒன்றியச் செயலாளர்கள் க.அன்பழகன், மு.கி.முத்துமாணிக்கம், வை.ரவிச்சந்திரன், கோ.இளங்கோவன், திமுக மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், நகரச் செயலாளர்கள் எஸ்.ஆர்.என்.செந்தில்குமார், என்.எஸ்.சேகர், மாரிமுத்து, கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


பேராவூரணி த.நீலகண்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad