உலகின் முதல் சிவாலயத்தில் கும்பாபிஷேகம் கோலாகலம் உலகின் முதல் சிவாலயம் என போற்றப்படும் உத்தரகோசமங்கை ஸ்ரீமங்களநாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

உலகின் முதல் சிவாலயத்தில் கும்பாபிஷேகம் கோலாகலம் உலகின் முதல் சிவாலயம் என போற்றப்படும் உத்தரகோசமங்கை ஸ்ரீமங்களநாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா

IMG-20250405-WA0560

உலகின் முதல் சிவாலயத்தில் கும்பாபிஷேகம் கோலாகலம் உலகின் முதல் சிவாலயம் என போற்றப்படும்  உத்தரகோசமங்கை ஸ்ரீமங்களநாதர்  சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.


இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட  திரு உத்திரகோசமங்கை மரகத நடராசர் ஸ்ரீமங்களநாதர் ராஜகோபுரம்,மங்களேஸ்வரி அம்பாள், கோபுரம் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அடங்கிய 24 கோபுரங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் 200க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்கினர் ட்ரோன்கள் மூலம் கோபுரங்களில் மலர்கள் துவப்பட்டன.


பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் என கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனர்.வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது.  போதுமான வாகன நிறுத்தம் ஏற்பாடுகள் செய்யாத  காரணத்தினால் அனைத்து சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  நான்கு  கிலோமீட்டர் தூரம் வரையில் அணி வகுத்து நின்ற வாகனங்கள். இதனால்  கோயிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள்  அவதியடைந்தனர். இதனால்  வயல்வெளிகளில் இறங்கி நடந்து சென்றனர். 3 மணி நேரத்திற்கு மேலாக  போக்குவரத்துக்கு  இடையூறு ஏற்பட்டது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், களரி கிராமம்  வரையில்  4 கிலோமீட்டர் தூரம் வரையில் நிறுத்தப்பட்டிருந்த  வாகனங்களை  போலீசார் துணையுடன்  சரி செய்து அனுப்பி வைத்தார்.. பின்னர் பொதுமக்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து திரும்பினர். இரண்டு சக்கர வாகனம் நிறுத்த தற்காலிக இடம் ஒதுக்கி (வயல்வெளியில்) நிறுத்தி வைக்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad