காட்பாடி அருகே பனை மரங்கள் தீப்பற்றி எரிந்து நாசம் வழக்கு பதிவு செய்து விசாரணை!
காட்பாடி , ஏப்ரல் 02 -
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் பகுதியில் ஆதிகேசவ வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடம் அருகில் உள்ளது. இதில் 1000-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. இதில் இருந்து சில பனை மரங்களில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் ஏற்பட்ட கரும்புகை வானுயரத்தில் காணப்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் காட்பாடியில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.இந்த திடீர் தீ விபத்தில் மோட்டார் சைக்கிள், மாட்டுக் கொட்டாய், 50-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தீயில் கருகி நாசமானது. பனை மரங்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்தும், யாராவது தீ வைத்தார்களா என்பது குறித்தும் காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள பனைமரங்கள் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக