திருமங்கலம் அருகே ரயிலில் புகைவந்ததால் பயணிகள் பீதி.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த சிவரக்கோட்டையில் திருவனந்த புரத்திலிருந்து மதுரை,பெங்களூர் வழியாக காக்கிநாடாவிரைவு ரயிலில் திருமங்கலம் அருகே காட்டுபன்றி மீது மோதியதில் ரயிலில் புகை வரவே பயணிகள் பீதியடைந்தனர். திருமங்கலம் ரயில்வே ஸ்டேசனில் நிறுத்தப்பட்டு புகை அணைக்கப்பட்ட பின்பு ரயில் புறப்பட்டு மதுரை சென்றது.
கேரளமாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து மதுரை, சேலம் வழியாக காக்கிநாடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 11.15 மணியளவில் திருமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் திருமங்கலத்தில் நிற்காது. விருதுநகர் - திருமங்கலம் இடையே படுவேகமாக வந்த போது சிவரக்கோட்டை இடத்தில் என்ற தண்டவாளத்தினை கடக்க முயன்ற காட்டுபன்றி மீது ரயில் மோதியது. இதில் காட்டுபன்றி ரயிலில் இன்ஜினில் சிக்கி கொண்டது. இதனால் ரயிலில் பெட்டிகளில் திடீரென புகைவரவே பயணிகள் பீதியடைந்தனர் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனை தொடர்ந்து ரயில் திருமங்கலம் ரயில்வேஸ்டேசனில் இரவு 11.30 மணியளவில் நிறுத்தபட்டு பயணிகள் கீழே இறக்கினர். பின்னர் ரயில்வே ஊழியர்கள் ரயிலில் புகையை அணைத்து சோதனையிட்ட போது ரயிலில் பிரேக் சூ ரிலிஸ் ஆகாமல் இருப்பது தெரியவந்தது. இதனால் 30 நிமிடங்கள் ரயில் திருமங்கலம் ஸ்டேசனில் நிறுத்திவைக்கப்பட்டது. அதனை சரிசெய்த ஊழியா்கள் ரயிலை அனுப்பிவைத்தனர். ரயில் கிளம்பியதும் தொடர்ந்து இன்ஜினில் சப்தம் வரவே ரயிலை மெதுவாக இயக்கிய இன்ஜின்டிரைவர் மதுரை ரயில்வே ஸ்டேசனுக்கு ஓட்டி சென்றார். அங்கு ரயில் நிறுத்தப்பட்டு பரிசோதனை செய்த போது ரயில் இன்ஜினில் காட்டுபன்றி சிக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து காட்டுபன்றியை வெளியே எடுத்த பின்பு ரயில் மதுரையிலிருந்து இரவு 12 மணிக்கு கிளம்பி பெங்களூர் வழியாக காக்கிநாடாவிற்கு சென்றது. இந்த சம்பவம் நள்ளிரவில் திருமங்கலம் மற்றும் மதுரை ரயில்வே ஸ்டேசன்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக