அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சாரண ஆசிரியர் ஜி.பாபுவுக்கு பணி நிறைவு பாராட்டு! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஏப்ரல், 2025

அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சாரண ஆசிரியர் ஜி.பாபுவுக்கு பணி நிறைவு பாராட்டு!

அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சாரண ஆசிரியர் ஜி.பாபுவுக்கு  பணி நிறைவு பாராட்டு!

குடியாத்தம் , ஏப் 15 -

வேலூர் மாவட்டம் காட்பாடி  அரசுப் பள்ளியில் 40 ஆண்டு காலம் உடற்கல்வி ஆசிரியராகவும், பட்டதாரி தமிழாசிரி யரா கவும் பாரத சாரண சாரணீய அமைப்பின் ஒருங்கிண்நத் வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி கல்வி மாவட்ட செயலாளராகவும் மாவட்ட
பயிற்சியாளரகவும் பணிபுரிந்து குடியாத்தம் நெல்லூர்பேட்டை  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணி நிறைவு பெற்றுள்ள  மூத்த பட்டதாரி தமிழ் ஆசிரியர் ஜி.பாபுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.இதற்கான விழா பள்ளி வளாகத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் வி.நாராயணன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக பள்ளியின் ஆசிரியர் சங்க செயலர் ஆர்.ஜெயகுமார் அனைவரையும் வரவேற்றார், சிறப்பு அழைப்பாளராக ஜாக்டோ ஜியோ  மாநில உயர் மட்ட குழு  உறுப்பினர் மற்றும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைபின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா. ஜனார்த்தனன் அவர்கள் கலந்து கொண்டு சால்வை அணிவித்து வாழ்த்துரை வழங்கினார், இந்நிகழ்ச்சி யில் உதவி தலைமை ஆசிரியர்கள் எம்.கீதா, அருள்பிரகாசம் தலைமை ஆசிரியர்கள் ஜோதி பாஸ்கரன் தேவராஜ் என் எஸ் அம்பிகா தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில சட்ட செயலாளர் காந்தி, மாவட்டத் தலைவர் எம்.எஸ். செல்வக்குமார், மாவட்ட செயலாளர் திருஞானசம்பந்தம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஜி.டி.பாபு தமிழக தமிழ் ஆசிரியர் கழக மாவட்ட தலைவரும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் ஜி.சீனிவாசன் வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன், அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி யின் கணிதத்துறை தலைவர் கருணாநிதி, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சதானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பணி நிறைவு பெற்ற ஆசிரியர் ஜி.பாபு ஏற்புரையாற்றினார்.
பள்ளியின் ஆசிரியர் சங்க பொருளாளர் ரேவதி மற்றும்  பட்டதாரி தமிழ் ஆசிரியர் சிவராஜ் நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad