தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு மாவட்ட துணை அமைப்பாளர் சார்பில்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஏப்ரல், 2025

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு மாவட்ட துணை அமைப்பாளர் சார்பில்!

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு மாவட்ட துணை அமைப்பாளர் சார்பில்!
திருப்பத்தூர் ,ஏப் 15 -

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அலுவலகத்தில்  குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு மாவட்ட துணை அமைப்பாளர் ராமசிங்காரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் 
அப்போது பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 திருத்த விதிகள் 1995 மற்றும் 2014ன் படி ஓய்வூதியம் 4500 ஆக நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. அதனை தற்போது 16950 ஆக உயர்த்திய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்தார் மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் 2021 மற்றும் 2022 சட்டமன்ற ஆளுநர் வரை அறிவிப்பின் கீழ் அரசு துறையில் காணப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கான குறைவு பணியிடங்கள் நிரப்புதல் அரசாணை 32 இன் படி அனைத்து காலி பணியிடங்களை உயர்த்த வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது   ஆனால் இதுவரை இப்பணியிடங்கள் முழுமை யாக நிரப்பப்படவில்லை எனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் இச்சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டோருக்கு கல்வி தகுதிக்கேற்ற பொருத்தமான வேலை வாய்ப்பினை  வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதற்கான அரசு வேலை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 
 இந்த நிகழ்வில் விழிப்பு மற்றும் கண் காணிப்பு குழு மாவட்ட செயலாளர் சங்கர் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர் செய்தியாளர் 
மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad