குடியாத்தம் அருகே கஞ்சா கடத்தியதாக 3
இளைஞர்கள் கைது !
குடியாத்தம் ,ஏப்10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை ஏரிக்கரை அருகே நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் பத்மநாபன் வீராசாமி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அங்கிருந்த 3 இளைஞர்களை சந்தேதின் பேரில் பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள்
மெளவுசன் பேட்டை பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 24) கோபாலபுரம் பகுதியை சேர்ந்த முகமது ஆசிம் (வயது 26)
புவனேஸ்வரி பேட்டை சேர்ந்த கிரிதரன் (வயது 23) என்பது தெரிய வந்தது அவர்கள் வைத்திருந்த பையைசோதனை செய்தபோது சுமார் 3 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது
அவர்களிடம் இருந்த கஞ்சாவைபறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக