குடியாத்தம் , ஏப் 06 -
குடியாத்தம் காங்கிரஸ் கட்சியினர் கருப்புத் துணியால் கண்களை கட்டிக்கொண்டு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்நடைபெற்றது இஸ்லாமயர்
களுக்கு எதிராக வக்ஃப் சட்ட திருத்தத் தை மேற்கொண்டு, தமிழக மக்கள் விரும் பாத இந்தி மொழி மற்றும் மும்மொழி கொள்கையை தமிழக மக்கள் மீது திணித்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை முடக்கி இன்று 06.04.2025 ஞாயிற்றுக்கிழமை காலை தமிழகத்திற்கு வருகைத் தந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வக்ஃப் சட்ட திருத்தத்தை கண்டித்தும் அதை உடனடியாக திரும்பப் பெற கோரியும் வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (ம) சார்பில் இன்று 06.04.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி யளவில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரில் கருப்பு கொடி ஏந்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும், தொடர்ந்து தமிழக மக்களையும், இசுலாமியர்களையும் மொட்டை அடித்து வரும் மோடியின் செயலை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் பாரத். நவீன்குமார் அவர்கள் தன்னுடைய தலையை மொட்டை அடிக்கும் நூதன போராட்டமும் நடைபெற்றது நிகழ்விற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஜலந்தர், மாவட்ட பொருளாளர் விஜயேந்திரன், மாவட்ட துணைத் தலைவர்கள் நீலகண்டன், முனுசாமி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் NMD.விக்ரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விசிக மாவட்ட செயலாளர் சுதாகர், மாநில பேச்சாளர் நாட்டாம்கார் அப்துல் அக்பர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் கிருபானந்தம் ஆகியோர் கண்டன உரையாற்றினர் ஆர்ப்பாட்டத்தில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள்சா.சங்கர், ஜோதி கணேசன், தனசேகரன், லோகி தாஸ், தாண்டவமூர்த்தி, பேரணாம்பட்டு நகர தலைவர் முஜம்மில் அஹ்மத், பள்ளிக்கொண்டா பேரூர் தலைவர் அக்பர் பாஷா, சிறுபான்மையினர் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் MD.ராகிப், எஸ்ஸி பிரிவு மாநில செயலாளர் சுப்பிர மணி, மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் திருமதி. கோமதி குமரேசன், எஸ்ஸி பிரிவு மாவட்ட தலைவர் அன்பரசன், ஊடகப் பிரிவு தலைவர் ஆடிட்டர் ஹரிபாபு, விவசாய பிரிவு மாவட்ட தலைவர் ராஜசேகரன், RGPRS மாவட்ட தலைவர் ஆனந்தவேல், ஒபிசி பிரிவு மாவட்ட தலைவர் ராகேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜய்பாபு, மாவட்ட நிர்வாகிகள் சரவணன், பாஸ்கரன், செந்தில், பள்ளிக்கொண்டா சிக்கந்தர் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள்
விசிக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
முடிவில் குடியாத்தம் மேற்கு வட்டார தலைவர் வீராங்கன் நன்றியுரை கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக