பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்திடவும், சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மூலமாக விழிப்புணர்வு. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 3 ஏப்ரல், 2025

பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்திடவும், சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மூலமாக விழிப்புணர்வு.

பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்திடவும், சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கணபதி சமுத்திரம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி உமரி காடு ஆகிய இரு பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மூலமாக விழிப்புணர்வு பேரணி இன்று நடத்தப்பட்டது. 

இதற்கு சிறப்பு விருந்தினராக ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி கலந்து கொண்டார்

மேலும் இந்த விழிப்புணர்வு பேரணியானது ஏரல் காந்தி சிலையில் ஆரம்பித்து ஏரல் பஜார் வழியாக ஏரல் பேருந்து நிலையம் வரையிலும் நடத்தப்பட்டது. மாணவர்கள் பாடல் மூலமாகவும் ஆசிரியர்கள் தங்களின் பேச்சு மூலமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

இந்நிகழ்விற்காக அரசு மேல்நிலைப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் திருமதி மணிமேகலை, கணபதி சமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி அன்னலட்சுமி, பட்டதாரி ஆசிரியர் திரு சிவசங்கர், காலை உணவு அமைப்பாளர் திருமதி அஞ்சுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad