ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத அதிதீஸ்வரர் சிவன் ஆலயத்தில் இசைஞானி இளையராஜா சுவாமி தரிசனம்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஏப்ரல், 2025

ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத அதிதீஸ்வரர் சிவன் ஆலயத்தில் இசைஞானி இளையராஜா சுவாமி தரிசனம்!

 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத அதிதீஸ்வரர்  சிவன் ஆலயத்தில் இசைஞானி இளையராஜா சுவாமி தரிசனம்!

வாணியம்பாடி,ஏப்.17- 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ அதிதீஸ்வரர் ஆலயத் தில் இசைஞானி இளையராஜா சுவாமி தரிசனம் செய்தார்.இன்று காலை வாணியம்பாடி தேவஸ்தானம் ஊராட்சி யில் உள்ள அதிதீஸ்வரர் ஆலயத்திற்கு காரில் வந்த இளையராஜா ஆலயத்தில் உள்ள தனி சன்னதியில் அமைந்துள்ள சரஸ்வதி ஆலயம் முருகர் ஆலயம் தட்சிணாமூர்த்தி ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களிலும் அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்து வழிபட்டார். மேலும் சுயம்பு ரூபமாக காட்சியளிக்கும் ஸ்ரீ அதிதீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த் தனை மேற்கொண்ட இளையராஜா பிரகாரத்தை சுற்றி வலம் வந்து சாமி தரிசனம் செய்தார்.அப்போது ஊராட்சி மன்ற தலைவர் அன்பு, தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளர் கே.பி.எஸ்.மாதேஸ் வரன், நிர்வாகி குமரகுரு, பகுதியை சேர்ந்த மொசைக் கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad