ஓய்வூதியர்களுக்கு எதிரான மசோதாவை கண்டித்து, என்.சி.சி.பி ஆர்ப்பாட்டம்!
ராணிப்பேட்டை, ஏப். 3 -
ராணிப்பேட்டை மாவட்டம் 8 வது ஊதியக்குழு அறிக்கையில் தற்போது ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர் களுக்கு எந்தவிதமான பலனும் வழங்கப்படாமல் வஞ்சிக்கும் மசோதா விவாதம் இல்லாமல் ஓய்வூதியர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டதை கண்டித்து ரத்து செய்யவேண்டி தேசிய ஓய்வூதியர் அமைப்புகளின் தேசிய ஒருங்கிணைப்பு குழு (என்.சி.சி.பி) சார்பில் வியாழனன்று (ஏப். 3) தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் என். சுந்தரேசன் தலைமையில் இராணிப்பேட்டை தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இறுதியாக எம். ஏகாம்பரம் நன்றி கூறி முடித்து வைத்தார். இந்த போராட்டத்தில் ஆர். சண்முகம், என். ஜெயக்குமார், தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கம் மாநிலத் துணைத் தலைவர் டி. குப்பன், இந்தியன் வங்கி ஓய்வூதியர் சங்கம் எம். சிவராமன் சிறப்புரை ஆற்றினார்கள். உடன் பள்ளி கல்லுரி ஓய்வூதியர் சங்கம் ஏ. அப்துல் ரஹீம், நிலவு குப்புசாமி, கோவிந்தசாமி, மாநில உதவி தலைவர் கே. லட்சுமிபதி, ஆர். தனசேகரன், பிஎஸ்என்எல் வேலாயுதம், வி.கே. நரசிம்மன், ஆர்.ஜி. குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றி முழக்கங்களை எழுப்பினர்.
சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக