மிகச் சிறப்பாக நடைபெற்ற மாபெரும் மருத்துவ முகாம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஏப்ரல், 2025

மிகச் சிறப்பாக நடைபெற்ற மாபெரும் மருத்துவ முகாம்

IMG-20250422-WA0044

மிகச் சிறப்பாக நடைபெற்ற மாபெரும் மருத்துவ முகாம்


தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம், நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை KMCH பல்நோக்கு மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று ஊட்டியில் உள்ள ஸ்ரீ சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மிக சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்சியில் உதகை வருவாய் கோட்டாச்சியர் திரு. சதீஷ். உதகை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. நவீன் குமார், KMCH மருத்துவனையின் முதன்மை செயல் அதிகாரி Dr. சிவக்குமாரன், தமிழக பத்திரிகையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் திரு ஹரிஹரன், ஸ்ரீ சாந்தி விஜய் பள்ளியின் தாளாளர் திரு. கட்டாரியா, தமிழக பத்திரிகையாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் திரு பாஷா, ஸ்ரீ சாந்தி விஜய் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி பத்மா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தனர். மற்றும் நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் திரு. K.M. ராஜு, உதகை நகராட்சி தலைவர் திருமதி வாணீஸ்வரி, நீலகிரி மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு.ரவிக்குமார் மற்றும் பலர் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.


KMCH மருத்துவமனையின் முன்னோடி சிறப்பு மருத்துவர்கள் 8 பேர் உட்பட, மருத்துவமனை ஊழியர்கள், உதவி மருத்துவர்கள் டெக்னிஷியன்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள் என 50 க்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் கலந்துக் கொண்டு பயனாளிகளுக்கு தேவையான பரிசோதனைகள் செய்து, தக்க ஆலோசனைகளையும் வழங்கினர். காலை 9.30 மணிக்கு துவங்கிய இந்த மருத்துவ முகாம் தொடர்ந்து மதியம் 1.30 மணிவரை நடைப்பெற்றது. இந்த முகாமில் 230க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துக் கொண்டு மருத்துவ ஆலோசனைப் பெற்று பயனடைந்தனர்.  


இந்நிகழ்ச்சியை நீலகிரி மாவட்ட தமிழக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் திரு. சகாயராஜா, மாவட்ட செயலாளர் திரு.ஜெரால்டு, மாவட்ட பொருளாளர் திரு. KSTமகேந்திரன் உட்பட மாவட்டத்தின் அனைத்து நிர்வாகிகளும் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அநேக பத்திரிகையாளர்களும் தங்களின் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக, மருத்துவர்களிடம்  ஆலோசனை பெற்று சென்றதும் குறிப்பிட தக்கது.  


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad