வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
மத்திய அரசு வக்பு வாரிய சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்துள்ளது இந்த திருத்தங்கள் இஸ்லாமியர்களை பாதிக்கும் அவர்களது உரிமைகளை பறிக்கும் செயல் என வலியுறுத்தி இந்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்து இந்தியா முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் ஜனநாயக அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்நிலையில்வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிவித்திருந்தார்
அதன்படி தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடிவிவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கண்டன ஆர்ப்பாட்டத்திற்குதூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதாஅக்னல் தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தமிழக வெற்றி கழகத்தினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக