திருமங்கலம் அருகே மாயக்குருவி, சாமாயி அம்மன் ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 ஏப்ரல், 2025

திருமங்கலம் அருகே மாயக்குருவி, சாமாயி அம்மன் ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா.

 

IMG_20250411_133857_197

திருமங்கலம் அருகே மாயக்குருவி, சாமாயி அம்மன் ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா.


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கண்டுகுளம் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாயக்குருவி சாமாயி அம்மன்,கருப்பசாமி சோனைச் சாமி உள்ளிட்ட ஒன்பது கோவில்  கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வந்தன. பல ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதால் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது. கும்பாபிஷேக விழாவையொட்டி  காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று   முதல் கால யாக சாலை பூஜைகணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இன்று காலை யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்து கோவிலை சுற்றி வந்து கோவில் கோபுரத்திற்கு காலை 10மணி அளவில் வேதமந்திரங்கள், மேளதாளங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து கோவிலுக்குள் உள்ள ஒன்பது கோவில் சிலைகளுக்கும்  பரிவார தெய்வங்களுக்கும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ,ஆராதனை நடைபெற்றது. பல ஆண்டுகளுக்கு பின்பு நடைபெறும் கும்பாபிஷேக விழாவை காண கண்டுகுளம் சாத்தங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad