யு.பி.எஸ்.சி தேர்வில் சாதனை படைத்த வெள்ளகோவில் பட்டாதாரி மாணவர் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 ஏப்ரல், 2025

யு.பி.எஸ்.சி தேர்வில் சாதனை படைத்த வெள்ளகோவில் பட்டாதாரி மாணவர்

 வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த வி. முருகேசன் - எம். சுமதி தம்பதியரின் மகன் எம்.மது சூர்யா ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான அகில இந்திய அளவில் நடைபெற்ற யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்று இந்திய அளவில் 708 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-ஆரம்பக் கல்வியை வெள்ளகோவில் மற்றும் ஊட்டியில் உள்ள தனியார் பள்ளிகளிலும், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள சைனிக் பள்ளியிலும் பயின்றேன். பொள்ளாச்சி அடுத்த எட்டிமடையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் படிப்பை முடித்தேன்.அதை தொடர்ந்து சிறப்பு பயிற்சி பெற்று இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன் என எம். மது சூர்யா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad