கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் நிறைவு விழா
பூதலூர் வேளாண் அலுவலகத்தில் ஆர் வி எஸ் (RVS) வேளாண் கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாணவர்கள் மேற்கொண்ட புல அனுபவங்களை மதிப்பீடு செய்ய நல்வாய்ப்பாக அமைந்தது.இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வேளாண்மை உதவி இயக்குநர் (ADA) ராதா கலந்து கொண்டு மாணவர்களின் முயற்சிகளை பாராட்டினார். அவருடைய உரையில், வேளாண்மை கல்வியில் நடைமுறை அனுபவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மாணவர் அனுபவங்கள்: புலப்பயண அனுபவங்கள், விவசாயம், கால்நடை மருத்துவம், நீர்வள மேலாண்மை ஆகியவை பகிரப்பட்டன.மாணவர்களின் பங்களிப்புக்காக ADA சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும்குறிப்பாக, வேளாண்மை துறையில் தொழில் முனைப்புத்தன்மையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது. இதில் மாணவர்கள் திவாகர், சிலம்பரசு, சிவகுரு, சுதர்ஷன், தமிழ் இனியன், தமிழரசன், தமிழ் மாறன், திருமுறைராஜன், உதயசந்திரன், விஷ்ணுபிரசாத் கலந்து கொண்டனர்.
பட விளக்கம்: பூதலூரில் ஆர் வி எஸ் (RVS) வேளாண் கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் நிறைவு விழா நடந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக