இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றதால் பரிபோன வாலிபனின் உயிர் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 ஏப்ரல், 2025

இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றதால் பரிபோன வாலிபனின் உயிர்

IMG-20250425-WA0001

இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றதால் பரிபோன வாலிபனின் உயிர்            


நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட எமரால்டு வ உ சி நகர் பகுதியை சேர்ந்தவர்   மணிகண்டன் இவர் புதன்கிழமை இரவு வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வரும் பொழுது நிலை தடுமாறி கட்டுப்பாட்டை  இழந்து அதன் பக்கத்து ஊரைச் சேர்ந்த சுமேஷ் என்பவர் மேல் மோதி பயங்கர விபத்துக்குள்ளானார். இதில் அதன் பக்கத்து ஊரைச் சேர்ந்த சுமேஷ் என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டு அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தலைக்கவசம் அணியாததால் தலையில் பயங்கரமாக சேதம் ஏற்பட்டது இவரை உடனே அருகில் உள்ள எமரால்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்கள் அவர்கள் முதலுதவி செய்து ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு மருத்துவமனைக்கு  பரிந்துரை செய்தனர் பின்பு தலையில் அதிக காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அழைத்துச் சென்று  இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். தலைக்கவசம் உயிர்க்கவசம் அதிவேகம் உயிருக்கு ஆபத்து என்று ஆங்காங்கே விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இத்தகைய உயிர்கள் பறிபோய் கொண்டு தான் இருக்கிறது. ஆகையால் வேகத்தை தவிப்பீர் உயிரை பாதுகாப்பீர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும்  நீலகிரி மாவட்ட இணையதள செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad