தஞ்சையில் சேவா பாரதி - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 ஏப்ரல், 2025

தஞ்சையில் சேவா பாரதி

IMG-20250418-WA0297(1)

தஞ்சையில் சேவா பாரதி பாரதி பயிலகம் சார்பில் யு பி எஸ் சி தேர்வு 


தஞ்சாவூர் மாவட்டம்  தஞ்சாவூர் சென்னை சேவா பாரதி. பாரதி பயிலகம் சார்பில் யு பி எஸ் சி தேர்வு நடைபெற்றது 


இந்த தேர்வுவில் வெற்றி பெற்றவர்கள் தமிழக முழுக்க உள்ள 2900 பேர் பதிவு செய்துள்ளார்கள். அதில் 100 நபர்களை ஆண். பெண் தேர்வு செய்து ஒரு வருடம் முழுவதுமாக அவர்களுக்கு ஐஏஎஸ் ஐபிஎஸ் குரூப் 1 தேர்வு எழுதுவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னையில் தங்கி உணவு தங்குமிடம் அனைத்தும் இலவசமாக செய்யப்படுகிறது அதற்கான தேர்வு நடைபெற்றது. தஞ்சாவூர் சேவா பாரதி மாவட்ட தலைவர் ஜி .கோவிந்தராஜீ தலைமை தாங்கினார்.. 


முன்னதாக ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர்  ஜெ.கிருஷ்ணமோகன் வரவேற்றார். மார்னிங் ஸ்டார் பள்ளியின் தாளாளர்  அறிவானந்தம் , தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி வி .மூர்த்தானந்த மகராஜ் ஆகியோர் ஆசியுரை வழங்கினார்கள் 


தஞ்சை  மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்  பி. ஜெய் சதீஷ் , ராஷ்டீரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் தஞ்சை கோட்ட அமைப்பாளர் முத்துக்குமார்,  சேவா பாரதி மாநில சமூக நலஒருங்கிணைப்பாளர் பி. எல்.கேசவன் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்கள். தொடர்ந்து

 

மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துரையும் பாராட்டுரையும் வழங்கி தேர்வை துவக்கி வைத்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad