வாலாஜா நகராட்சியில் பெண் குழந்தை பாதுகாப்பு கமிட்டி கூட்டம்!
வாலாஜாபேட்டை, ஏப் 10 -
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை நகராட்சி நகர மன்ற அலுவலக கூட்ட அரங்கில் நகர் மன்ற தலைவர் ஹரிணி தில்லை அவர்களது தலைமையில் நகராட்சி ஆணையர் திருமதி இளையராணி அவர்களுடைய முன்னிலையில் இந்நகராட்சி பெண் குழந்தை பாதுகாப்பு கமிட்டி கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் தன்னார் வலர்கள் கலந்து கொண்டனர் மேலும் இக்கூட்டத்தில் உள்ளூர் காவல்துறை சார்பு ஆய்வாளர் மகாராஜன் அவர்களும் கலந்து கொண்டார்கள் இக்கூட்டத்தில் இந்நகரில் பெண் குழந்தைகள் பாதுகாப் பாக இருப்பது பற்றியும் பெண் குழந்தை கள் மற்றும் ஆண் குழந்தைகளிடையே போதைப் பழக்கத்திலிருந்து பாதுகாப் பது இளம் வயது திருமணத்தை தடுப்பது பெண் கல்வி ஊக்குவிப்பது மற்றும் ரத்த சோகையில் இருந்து அவர்களை பாது காப்பது போன்ற கருத்துக்கள் எடுத்து ரைக்கப்பட்டது இக்கூட்டமானது ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை நகராட்சி அளவிலான கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப் பட்டது இக்கூட்டத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு 1098, 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர் களுக்கு 181 60 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு 14 567 என்ற புகார் எண்களுக்கு பொதுமக்கள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் புகார் செய்து தகவல்கள் தெரிவிக்கலாம் தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் மொபைல் எண் ரகசியம் காக்கப்படும் புகாரின் தன்மை குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார ஆய்வாளர் அவர்கள் தெரிவித்தார்கள்
ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக