எடப்பாடி இல்லாத அதிமுகவா??செங்கோட்டையனுக்கு ஒய் பிளஸ் செக்யூரிட்டி பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி என மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
அதிமுகவில் பொதுச் செயலாளராக இருந்து வரும் பழனிச்சாமியின் தலைமையில் அவ்வப்போது முன்னாள் அமைச்சர்களுக்கு இடையே சச்சரவுகள் எழுந்து வரக் கூடிய வேளையில் கடந்த சில நாட்களாகவே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி பயணம் உள்ளிட்டவைகள் தற்போது சர்ச்சையாகி பேசு பொருளாகி உள்ள நிலையில்
மதுரையைச் சேர்ந்த முன்னாள் அதிமுக பிரமுகர் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது
குறிப்பாக அதில் அவர் தன்னை மத்திய தொகுதி செயலாளர் என்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மிக செந்தில் என்பவர் ஒட்டி உள்ள அந்த போஸ்டரில்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் செங்கோட்டையன் அவர்களுக்கு ஒய் பிளஸ் செக்யூரிட்டி பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி என்ற வாசகம் கலைஞர் போஸ்டர் மதுரையில் ஒட்டப்பட்டுள்ளது
மேலும் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, ராஜன் செல்லப்பா, தங்கமணி வேலுமணி, ஆகியோருடைய புகைப்படத்துடன் செங்கோட்டையனின் புகைப்படமும் அடங்கிய போஸ்டர் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும்
ஒட்டப்பட்டுள்ளது
எடப்பாடி பழனிச்சாமி புகைப்படம் இல்லாமல் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் மாதிரி பேசு பொருளாகி இருக்கிறது
குறிப்பி.1 ஆரம்ப காலகட்டத்தில் இவர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் ஆதரவாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது அதிமுகவில் இல்லை என்கிறது கட்சியின் வட்டாரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக