தாராபுரத்தில் வக்ஃப் திருத்த சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்து தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் தாராபுரம் அண்ணா சிலை முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து இஸ்லாமியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்..!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில்
வக்ஃப் திருத்த சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்து தாராபுரம்
தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.. அதன்படி தாராபுரத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்கள் சேர்ந்த ஜமாத்தார்கள் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலமாக சென்று வக்பு சொத்துக்களை மத்திய அரசு கொள்ளையடிக்க முயல்வதாகவும் மத்திய அரசின் வெறுப்பு அரசியலையும் கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்...ஆர்ப்பாட்டத்தில் தாராபுரம் திமுக நகர கழக செயலாளர் முருகானந்தம், நகர மன்றத் தலைவர் பாப்பு கண்ணன் ,இமாம்கள் ,ஏரளமான ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக