ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும்! ராணிப்பேட்டையில் ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் பேட்டி - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஏப்ரல், 2025

ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும்! ராணிப்பேட்டையில் ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் பேட்டி

ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும்!  
ராணிப்பேட்டையில் ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் பேட்டி
 


ராணிப்பேட்டை, ஏப். 10 -

ராணிப்பேட்டை மாவட்டம் ஏஐடியுசி கட்டிடத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் எஸ். சாம்பசிவம் தலைமையில் கட்டுமான தொழிலாளர் களுக்கு வாரியத்தில் வழங்கப்படும் நல திட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரவை கூட்டம் விழாவின  இன்று (ஏப். 10) அம்மூர் காந்தி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.மாநில பொது செயலாளர் கோவை என். செல்வ ராஜ் பேசியதாவது, நடப்பு மானிய கோரிக்கையின் மீது தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுமான தொழிலாளர் களுக்கு ஓய்வு அறை,உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அறிவிப்புகளை வரவேற்கிறோம். மேலும் வாரிய தீர்மானத்தின்படி ரூ. 2 ஆயிரம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்கு தற்போது வழங்கி வரும் 4 லட்சத்தை கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட அறிவிப்புகள் நடப்பு நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்த் திருந்த நிலையில் சற்று ஏமாற்றம் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
 இதில் மாநில பொதுச் செயலாளர் கோவை என். செல்வராஜ், ஆர். துரை சாமி, சி. நந்தினி, மாவட்ட செயலாளர் ஏ.எஸ். சங்கர் மேஸ்திரி, கே. நித்யா னந்தம், பி.எஸ். பரமசிவம் ஆகியோர் பேசினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி. லதா வாழ்த்தி பேசினார். உடன் எஸ்.ஜி. தீபா குண சேகரன், ஜி. ரவி, சத்தியமூர்த்தி, முருகானந்தம், ஜீவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக அதிசயம், கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறி முடித்து வைத்தார் .

ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad