பள்ளி மாணவியின் புகைப்படத்தை மாப்பிங் செய்து நண்பர்களுடன் மிரட்டி வந்த இளைஞர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஏப்ரல், 2025

பள்ளி மாணவியின் புகைப்படத்தை மாப்பிங் செய்து நண்பர்களுடன் மிரட்டி வந்த இளைஞர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

பள்ளி மாணவியின் புகைப்படத்தை மாப்பிங் செய்து நண்பர்களுடன் மிரட்டி வந்த இளைஞர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

வாணியம்பாடி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து நண்பர்களுக்கு அனுப்பி வைத்து மிரட்டி வந்த இளைஞர்கள் உட்பட  5 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

வாணியம்பாடி, ஏப்.10-

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் கிராமத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவருடன் முகநூல் வலை பக்கத்தில் அதே பகுதி யை சேர்ந்த இளைஞர் கலையரசன் என்பவர் நண்பராக இணைத்து கொண்டு ள்ளார். பின்னர்மாணவியை உன்னுடைய புகைப்படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து உனது பெற்றோருக்கு அனுப்பி வைப்பேன் எனவும் பல்வேறு வகையில் மிரட்டி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மாண வியின் போட்டோவை மார்பிங் செய்து அவரது நண்பர்கள் ஐந்து பேருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை அறிந்த மாணவி அழுது கொண்டு பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பெற்றோர் ஆலங்காயம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவியிடம் முகநூல் பக்கத்தில் நண்பராகி மாணவியின் போட்டோவை நிர்வாணமாக மார்பிங் செய்து நண்பர் களுக்கு அனுப்பி வைத்து மிரட்டி வந்த கலையரசனை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரது நண்பர்களான பூங்குளம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் ,சந்தோஷ் மற்றும் சிறுவர்கள் இரண்டு பேர் என  5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு ஐந்து பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து  திருப்பத்தூர் நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத் தனர். மேலும் சிறுவர்கள் இரண்டு பேரை சென்னையில்  உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.பூங்குளம் கிராமத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி க்கு சமூக வலைதள பக்கத்தில் நண்பராகி மாணவியின் போட்டோவை நிர்வாணமாக மார்பிங்  செய்து  நண்பர்க ளுக்கு அனுப்பி வைத்த இளைஞர்கள் 5 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதான சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


க திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி செய்தியாளர் 
R.மஞ்சுநாத்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad