குடியாத்தம் அருகே வீட்டில் திருட வந்தவர் தாய் மகனை கத்தியால் கையை அறுத்துவிட்டு தப்பி ஓட்டம் !
குடியாத்தம் ,ஏப்ரல் 1 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள பார்வதிபுரம் கிராமத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அலுவலர் செல்வராஜ் என்பவர் வீட்டில் இன்று காலை ஒருவர் திருட வந்துள்ளார்
அப்போது அவருடைய மனைவி விஜயகுமாரி என்பவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி பறிக்க முயற்சித் துள்ளார் இதனால் விஜயகுமாரி கூச்சலிடவே அவரது மகன் கணேசன் திருடனை பிடிக்க முயற்சி செய்தார் அப்போது அவன் கையில் இருந்த கத்தியால் அறுத்துவிட்டு தப்பி ஓடி விட்டான் இது சம்பந்தமாக நகர காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக