முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவிப்பை தொடர்ந்து.அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது
அதிமுக பாஜக கூட்டணிக்கு முதலில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருபவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். கடந்த தேர்தலில் தனது தோல்விக்கு காரணமேக, அதிமுக பாஜக கூட்டணிதான் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தார்.
அதனால் பாஜகவுடன் கூட்டணி அமைக்கக்கூடாது என வலியுறுத்தி வந்தார்
ஆனால், அவரது கூற்றுக்கு மாறாக 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி உருவாகி உள்ளது. இதற்காக மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் (முன்னாள் அதிமுக அமைச்சர்) நியமிப்பட உள்ளார்
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவில் இருந்து விலகுவதாகஅறிவித்து உள்ளார்
பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததால், கட்சியில் இருந்து நான் விலகுகிறேன். புரட்சித்தலைவர், புரட்சி தலைவியின் வழியில் என் அரசியல் பயணம் தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக