பாம்பன் புதிய ரயில் பாலத்தை பாரதப் பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்து போக்குவரத்தை தொடங்கி வைத்தார்,
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் 550 கோடி செலவில் கட்டப்பட்ட பாம்பன் புதிய செங்குத்து ரயில் பாலத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து கடலோர காவல் படை ரோந்து கப்பல் சென்றதை பார்வையிட்டு பின்னர் கொடியசைத்து ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்காக இலங்கையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மண்டபம் வந்த பிரதமரை மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய ரயில்வே,செய்தி மற்றும் ஒலிபரப்பு & மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்துறை இணை அமைச்சர் எல்,முருகன், அமைச்சர் தமிழ்நாடு நிதி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் தங்கம் தென்னரசு, பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன், பி.ஜே.பி மாநில தலைவர் அண்ணாமலை, உட்பட பலர் வரவேற்றனர். பின்னர் சாலை மார்க்கமாக பாம்பன் சென்ற பிரதமர் செங்குத்தான தூக்கு பாலத்தை திறந்து வைத்து முதல் ரயில் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பின்னர் ராமேஸ்வரம் சென்ற பிரதமர் ஶ்ரீராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் விழா மேடைக்கு சென்று 8.300 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்து, உரையாற்றினார். இந்நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மண்டபம் வந்த பிரதமர் ஹெலிகாப்டர் மூலமாக மதுரை சென்று அங்கிருத்து தனி விமானம் மூலமாக டெல்லி புறப்பட்டு சென்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக