குத்தாலத்தில் சிவசேனா கட்சி சார்பாக மோட்ச தீபம் ஏற்றி புஷ்ப அஞ்சலி - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 ஏப்ரல், 2025

குத்தாலத்தில் சிவசேனா கட்சி சார்பாக மோட்ச தீபம் ஏற்றி புஷ்ப அஞ்சலி

 

IMG-20250425-WA0036

குத்தாலத்தில் சிவசேனா கட்சி சார்பாக   மோட்ச தீபம் ஏற்றி புஷ்ப அஞ்சலி 


பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் உயிர் இழந்தவர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காடு கடைவீதியில் உள்ள சிவசேனா கட்சி சார்பில் புஷ்ப அஞ்சலி மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது


 இந்நிகழ்ச்சியில்  மாவட்ட தலைவர் கவிதா தலைமை தாங்கினார். முன்னாள் பாஜக ஒன்றிய தலைவர் கல்யாணசுந்தரம், இந்து முன்னணி ஒன்றிய தலைவர் கல்யாணசுந்தரம், பாமக கிளை செயலாளர் கௌதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


சிறப்பு அழைப்பாளர்களாக சிவசேனா மாநில துணைத்தலைவர் பூக்கடை ஆனந்த், இந்து புரட்சி முன்னணி மயிலாடுதுறை மாவட்ட தலைவர் ஜோதிகுமரன், சிவசேனா தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் பிரகாஷ் ஆகியோர்  கலந்து கொண்டு , காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட 28 அப்பாவி மக்களுக்கு புஷ்ப அஞ்சலி செலுத்தி மோட்ச தீபம் ஏற்றினர். மேலும் அவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. 


இதில் சிவசேனா கட்சி மற்றும் இந்து புரட்சி முன்னணி இந்து முன்னணி பாமக உள்ளிட்ட உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad