தொடர் குற்ற சம்பவங்களை தடுக்க குடியாத்தம் போலீசார் விடிய விடிய வாகன சோதனை! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஏப்ரல், 2025

தொடர் குற்ற சம்பவங்களை தடுக்க குடியாத்தம் போலீசார் விடிய விடிய வாகன சோதனை!

தொடர் குற்ற சம்பவங்களை தடுக்க குடியாத்தம் போலீசார் விடிய விடிய வாகன சோதனை!
குடியாத்தம் , ஏப் 04 -

துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகன தணிக்கை மற்றும் ரோந்து பணி சந்தேக நபர்களின் கை ரேகையை பதிவு செய்த  போலீசார்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பார்வதிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் வீடு புகுந்து கொள்ளை முயற்சி நடைபெற்றது அதை தடுத்த தாய் மற்றும் மகன் கத்தியால்  வெட்டப்பட்ட சம்பவம் மற்றும், குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான பட்டு, ஒலக்காசி, மற்றும்  பள்ளிகொண்டா ஆகிய பகுதிகளில் பூட்டிய வீடுகளில் கொள்ளை முயற்சி நடைபெற்றது தொடர் குற்ற சம்பவங்கள் நடைபெற்றதை தொடர்ந்து, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின் பேரில், 
குடியாத்தம் நகர போலீசார் குடியாத்தம் நகர ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் ஆந்திரா கர்நாடகா செல்லும் முக்கிய சாலைகளின் சந்திப்புகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்,மேலும் வெளி மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டு அவர்களின் விவரங்களையும் பதிவு செய்தனர் மேலும் சந்தேகத்திற்கிடமாக வரும் நபர்களின் கை ரேகையை போலீசார் பதிவு செய்தனர் மேலும் குடியாத்தம் நகரம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.


குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad