குருத்தோலை ஞாயிறு வழிபாடு ஊர்வலம்
குருத்து ஞாயிறு (Palm Sunday) அல்லது குருத்தோலை ஞாயிறு என்பது இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து கிறித்தவர்கள் ஆண்டுதோறும் அனுசரிக்கின்றனர். பாடுகளின் குருத்து ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது.கூடலூர் சிஎஸ்ஐ ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.குரு தோலைகளை கையில் ஏந்தி செல்லும் போது தாவிதின் குமாரனுக்கு ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்தரிக்கப்பட்டவர் என்று கோஷம் எழுப்பினர். இந்த ஊர்வலத்தில் பெரும்பாலான கிறிஸ்தவ பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக