ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் பாஜக ஸ்தாபன விழா மற்றும் தண்ணீர் பந்தல் துவக்க விழா!! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் பாஜக ஸ்தாபன விழா மற்றும் தண்ணீர் பந்தல் துவக்க விழா!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் பாஜக ஸ்தாபன விழா மற்றும் தண்ணீர் பந்தல் துவக்க விழா!!

ராணிப்பேட்டை , ஏப் ‌06 -

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில்  பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தின விழா மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். தேசிய பொதுக் குழு உறுப்பினர் தணிகாசலம், மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.வி. பிரகாஷ், டி.எல். பாலாஜி, முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் பாலமுருகன், சமகல்வி பொறுப்பாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்தாபன நிகழ்ச்சி பொறுப்பாளர்கள்  சரவணன், சுரேஷ்குமார் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் நெமிலி ஆனந்தன் கலந்து கொண்டு கட்சியின் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி சிறப்பித்தார். 
பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகம் அருகே தண்ணீர் பந்தலை துவக்கி வைத்து சிறப்பித்தார். இதில் மாவட்ட நிர்வாகிகள்  சிவமணி, சுரேஷ், புவனேஸ்வரி,லோகநாதன், ராஜசேகர், சபாபதி, நாகலேரி ஆனந்த், சீனிவாசன், எஸ்.எல்.டி. முருகன், பழனி குமார், நரேஷ், ஆச்சி ரவி, நிர்மல்குமார் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad