ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கும்பிகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 3 ஏப்ரல், 2025

ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கும்பிகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா.

கும்பிகுளம் - அரசுப்பள்ளியில் ஆண்டு விழா.

ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கும்பிகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது . விழாவிற்கு வட்டாரக்கல்வி அலுவலர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார் . 

ஊராட்சி மன்ற தலைவர் சந்தனமாரி மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேணுகோபால் முன்னிலை வகித்தனர். . தலைமை ஆசிரியை எமரென்சியா மேரி ஆண்டறிக்கை சமர்ப்பித்தார் . மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது . 

நடப்பு கல்வியாண்டில் கல்வியில் பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன .

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அலாய்சியஸ் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் மரியசிலுவை, நம்மால் முடியும் குழு தலைவர் காமராஜ் , முன்னாள் ராதாபுரம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜா, 

பள்ளி மேலாண்மைகுழு தலைவர் கிருஷ்ணவேணி, ஆசிரியர்கள் அருள்தாசன், ஜெயசேகரன், ஆறுமுகப்பண்டி, பாக்கியசெல்வி, ராஜ்குமார், நம்பிதுரை,வைகுண்டராஜா ,சிவகாமி ,ஜெயலெட்சுமி , வழக்கறிஞர் மணி ,சமூகசேவகர் கூடன்குளம் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர் . உதவி ஆசிரியர் ஜோசப் நன்றி கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad