பெருங்குளம் கிராமத்தில் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

பெருங்குளம் கிராமத்தில் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்

 

IMG-20250413-WA0408

பெருங்குளம்  கிராமத்தில் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்


முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பிரச்சினைகளை சரி செய்து கொடுக்க மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குடிமைப் பொருள் வழங்கல் தனி தாசில்தாருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஒவ்வொரு கிராமமாக சென்று முகாம் நடத்தி குடும்ப அட்டையில் உள்ள பிரச்சினைகளை குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தார் பழனிக்குமார் தீர்த்து வருகிறார்.


அதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பெருங்குளம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமிற்கு குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தார் பழனிக்குமார் தலைமை தாங்கி குடும்ப அட்டையில் பெயர் மாற்றம், நீக்கம், முகவரி மாற்றம், தொலைபேசி எண் திருத்தம், பெயர் திருத்தம், ஆதார் எண் இணைத்தல் தொடர்பான பணிகளை இம்முகாமின் மூலம் பொதுமக்களிடம் இருந்து 72 மனுக்களை பெற்று உடனடி தீர்வு காண வழிவகை செய்தார். இந்த முகாமில் வருவாய் துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad