தமிழ்செம்மல் விருது பெற்ற காட்பாடி ரெட்கிராஸ் அவை துணைத்தலைவர் ஆர்.சீனிவாசனுக்கு பாராட்டு!
காட்பாடி , ஏப் 06 -
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ நாராயணி திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் தமிழ் செம்மல் விருத பெற்றுள்ள இந்தியன் ரெட்கிராஸ் காட்பாடி கிளையின் அவை துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன் சேவைகளை பாராட்டி விஐடி பல்கலை கழக வேந்தர் கோ.விசுவநாதன், துணை மேயர் எம்.சுனில்குமார் ஆகியோர் பாராட்டினர். காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில் நடை பெற்ற விழாவிற்கு அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கி அறிமுக உரையாற்றினார். முன்னதாக அவை துணைத்தலைவர் ஆர்.விஜய குமாரி வரவேற்று பேசினார்.
மருத்துவக்குழு தலைவர் டாக்டர் வி.தீனபந்து, பி.என்.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். வேலூர் மாநகராட்சியின் துணை மேயர் எம்.சுனில்குமார் சால்வை அணிவித்து பாராட்டி பேசினர்.
வேலூர் வி.ஐ.டி பல்கலைகழகத்தின் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன், தமிழ் சேவைகளை பாராட்டி விருது பெற்றுள்ள ஆர்.சீனிவாசனுக்கு சால்வை அணி வித்து நினைவு பரிசு வழங்கி பேசினார் அப்போது அவர் கூறியதாவது.
ரெட்கிராஸ் அமைப்பின் அடிப்படையே சேவை செய்வது தான் எனவே காட்பாடி ரெட்கிராஸ் சங்க கிளையும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திகொண்டு பணியாற்றி வருகிறது. இந்த வகையில் காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் துணைத்தலைவர் கவிஞர் ஆர்.சீனிவா சனை பாராட்டி தமிழ்நாடு அரசு தமிழ் செம்மல் விருது வழங்கி பாராட்டியிருப் பதற்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த விருதினை பெற தகுதியுடையவரை தேர்வு செய்து பாராட்டியுள்ளதை வரவேற்கிறேன் என்றார்.குமரன் மருத்துவமனை நிர்வாகி மயிலாம்பிகை குமரகுரு, ஓய்வுபெற்ற மாவட்ட பதிவாளர் ச.இலக்குமிபதி, இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில துணைத்தலைவர் டாக்டர் அ.மு.இக்ராம், நாராயணா டிரேடர்ஸ் உரிமையாளர் நா.தங்கவேலு ஆகியோர் வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு அரசின் தமிழ் செம்மல் விருது பெற்ற ஆர்.சீனிவாசன் ஏற்புரையாற்றினார்.முடிவில் பொருளாளர் வி.பழனி நன்றி கூறினார்.
மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆர்.ராதாகிருஷ்ணன், க.குணசேகரன், வே.ஆறுமுகம், டி.லிவிங்ஸ்டன் மோசஸ், எல்ரவிச்சந்திரன்ஆர்.லட்சுமிநாராயணன்ஆகியோர் உள்பட பலர் பங்கேற்று சால்வை அணிவித்து வாழ்த்தினர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக