பெரிய மாரியம்மன் வகையறா கோவில் திருவிழா - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஏப்ரல், 2025

பெரிய மாரியம்மன் வகையறா கோவில் திருவிழா

IMG-20250402-WA0122

பெரிய மாரியம்மன் வகையறா கோவில் திருவிழா ஈரோடு வ.உ.சி.காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆயிரக்கணக்கான வியாபாரிகள் தீர்த்தக் குடம் எடுத்து கம்பத்துக்கு புனித நீராற்றி வழிபாடு :


ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் குண்டம், தேர் திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பெரிய மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு புனித நீர் ஊற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீர் ஊற்றி வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா இன்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நாளை தேர் திருவிழா நடைபெறுகிறது. வருகிற 5-ம் தேதி பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் நடப்பட்ட கம்பங்கள் எடுக்கப்பட்டு ஊர்வலமாக வந்து காவிரி ஆற்றில் விடப்படுகிறது.


கோவில் திருவிழா காரணமாக ஈரோடு மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சில்லறை மற்றும் மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதன் வளாகத்திலேயே பழச்சந்தையும் செயல்பட்டு வருகிறது. தாளவாடி, திருப்பூர், ஒட்டன்சத்திரம், பெங்களூரு, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad