மதுரையில் முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ள சுங்கம் கல்வெட்டு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஏப்ரல், 2025

மதுரையில் முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ள சுங்கம் கல்வெட்டு.

 

IMG_20250416_212431_916

மதுரையில் முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ள சுங்கம் கல்வெட்டு.



1836ம் ஆண்டை சேர்ந்த ஆங்கிலேயர் கால சுங்கம் கல்வெட்டு கண்டுபிடிப்பு.


மதுரை மாவட்டத்தில் முதல் முறையாக சுங்கம் பற்றிய கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.



மதுரை வைகை தென்கரை பகுதியில் இருக்கும் நெல்பேட்டை, சுங்கம் பள்ளிவாசல் முன்புறம் இந்த கல்வெட்டு இருக்கிறது.



2அடி உயரம், ஒரு அடி நீளம் அரை அடி அகலம் கொண்ட செவ்வக தனி துண்டு கல்லில் ஐந்து வரிகளில்
சுங்கச்சாவடி சந்து வெளிவீதி என்று உள்ளது.



சுங்கம் என்பது வெளியிடங்களில் இருந்து இறக்குமதி ஆகும் அல்லது ஏற்றுமதியாகும் வணிகப் பொருள்கள் மற்றும் நுகர்வு பொருள்கள் மீது விதிக்கப்படும் வரி குறித்து கல்வெட்டு தெரிவிக்கிறது.


அரசுக்கு வருவாய் ஈட்டுவதற்காகவும், ஒப்பந்த அடிப்படையில் மனிதர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பாதுகாவலர்களுக்கு ஊதியம் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்டதாக இந்த இடம் சுங்கம் வசூலிக்கும் இடமாக இருந்திருக்கலாம். இங்கே இப்பொழுது ஒரு பள்ளிவாசல் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad