சிறுமுகை பகுதியில் உடல்நலக் குறைவால் நடக்க முடியாமல் தவித்த ஆண் காட்டு யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பகுதியில் உடல்நல குறைவால் நடக்க முடியாமல் ஒரு தனியார் தோட்டத்தில் ஆண் காட்டு யானை ஒன்று தவித்தது, வனத்துறையினர் அதற்கு பழங்களில் வலி நிவாரணி மற்றும் ஊட்டச்சத்து மருந்துகளை கொடுத்து முதற்கட்ட சிகிச்சை அளித்தனர். யானையின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் உள் உறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு இருக்கலாம்என்பதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும் எனவும் வனத்துறை மருத்துவர்கள் தெரிவித்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக