மானாமதுரை தல்லாகுளம் ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் ஆலயத்தில் வருஷாபிஷேக விழாவில் சிறப்பாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற தல்லாகுளம் ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலயத்தில் வருஷாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், மற்றும் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் மனவரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம பொதுமக்கள் மற்றும் பக்த கோடி பெருமக்கள் தங்கள் வேண்டுதல்களை மேற்கொண்டு கலந்து கொண்டனர். மேலும் சமீபத்தில் இந்த ஆலயத்தில் உள்ள 200 ஆண்டு பழமையான வரலாற்றுப் பெருமையுடைய ஆலமரமானது சரிந்து விழுந்ததையடுத்து, அதே இடத்தில் அதேமரத்தின் ஒரு பாகம் நடவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக