சிவகங்கையில் வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து காங்கிரஸார் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
இந்திய நாடாளுமன்ற மற்றும் பாராளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃப் வாரிய திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும், தமிழகம் வரும் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்றிய பாஜக அரசை வன்மையாக கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கருப்புக்கொடி ஏந்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் நிதி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு ப. சிதம்பரம் மற்றும் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர், சட்டமன்ற உறுப்பினர் திரு செல்வப் பெருந்தகை ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரண்மனை வாசலில் உள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக சிவகங்கை மாவட்ட தலைவர் திரு சஞ்சய் காந்தி அவர்களின் தலைமையில் இரு அவைகளிலும் வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும், ராமேஸ்வரம் மண்டபத்தில் உள்ள பாம்பன் பாலத்தை திறந்து வைக்க வரும் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிறுபான்மையினருக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் ஒன்றிய பாசிச பாஜக அரசை வன்மையாக கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். மாங்குடி, பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் சி. ஆர். சுந்தர்ராஜன், சிவகங்கை சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சோனை, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் இளம் பரிதி கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் முன்னாள் மற்றும் இந்நாள் சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள், நகர தலைவர்கள், வட்டார தலைவர்கள், இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், சேவாதளம், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவு காங்கிரஸ், சிறுபான்மைத்துறை, இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், துணை அமைப்புகள், கிராம கமிட்டி நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
மேலும் வக்ஃப் வாரிய திருத்த மசோதா அமல்படுத்தியதை எதிர்த்து கொந்தளித்துள்ள இஸ்லாமிய அமைப்புகள் கொல்கத்தா, உத்திரபிரதேசம், குஜராத், மேற்குவங்கம், ஜம்மு- காஷ்மீர், அகமதாபாத் உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்பதும், தற்போது கிறிஸ்தவ தேவாலய சொத்துக்கள் மீது தனது கவனத்தை திருப்பி உள்ளது ஆர். எஸ். எஸ். என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் என்பதும், யூனியன் பிரதேசமான சண்டிகரில் கிறிஸ்தவர்களின் துக்க அனுசரிப்பு நாளான 'புனித வெள்ளி' தினத்தை பணி நாளாக அறிவித்து ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டு தனது அடுத்த ஆட்டத்தை தொடங்கிய பாஜகவிற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக