சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா வயல்சேரி கிராமத்தைச் சேர்ந்த லக்ஷ்மணன் மகன் பால்பாண்டி என்பவர் மீது பதியப்பட்ட போக்ஸோ வழக்கானது சிவகங்கை நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை அதிகாரி காவல் ஆய்வாளர் திரு சரிதா பாலு மற்றும் நீதிமன்ற காவலர் கார்த்தி உள்ளிட்டோர் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று சிவகங்கையில் உள்ள போக்ஸோ நீதிமன்றத்தில் நீதிபதி உயர்திரு கோகுல் முருகன் அவர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அத்தீர்ப்பில் பால்பாண்டி மீது குற்றம் நிறுபனமான நிலையில் பால்பாண்டிக்கு நான்கு முழு ஆயுள் கடுங்காவல் தண்டனை, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரூபாய் பத்து லட்சம் இழப்பீடு மற்றும் அபதார தொகையாக ரூபாய் 4100 விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக