தாராபுரத்தில் நகர திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஏப்ரல், 2025

தாராபுரத்தில் நகர திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்.

IMG-20250408-WA0318


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ,தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10-சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுப்பு தெரிவித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வந்தது இந்த வழக்கு இன்று விசாரணை மேற்கொண்டு நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு வழங்கினர்.


அதன்படி அரசியல் சாசனப்படி ஆளுநர் மாநில அரசின் உதவி மற்றும் ஆலோசனைப்படி தான் செயல்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது இதனை கொண்டாடும் வகையில் தாராபுரம், திமுக நகரச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நகர மன்ற தலைவர் பாப்புகண்ணன் மற்றும்  திமுகவினர் தாராபுரம் அண்ணா சிலை முன்பாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.


தமிழக அரசு அனுப்பிய 10-மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அரசியல் சாசனப் பிரிவு 142-ன் படி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அனைத்து மசோதாக்களும் ஒப்புதல் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை திமுகவினர் கேட் வெட்டியும், பட்டாசு வெடித்தும் இனிப்புகள் கொடுக்கும் உற்சாகமாகக் கொண்டாடினர். மேலும் நீதி மன்றத்திற்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர் இந்த நிகழ்ச்சியின் போது

திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad