சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் கலைஞர் மாணவர் தமிழ் மன்றத்தின் சார்பாக கலைஞர் மாணவர் தமிழ் மன்ற விழா 03-04-2025 பிற்பகல் கல்லூரி உமையாள் கலையரங்கில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி
அழகப்பா அரசு கலைக்கல்லூரித் தமிழ்த்துறை இணைப் பேராசிரியரும் தமிழ்த்துறைத் தலைவருமான முனைவர் சிதம்பரம் வரவேற்புரை நல்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி தலைமையேற்றுத் தனது தலைமையுரையில் கலைஞர் தமிழின் சிறப்பியல்புகளையும் கலைஞர் தமிழுக்கு ஆற்றிய அரும்பெரும் பணிகளையும் எடுத்துரைத்தார். கலைஞர் தமிழ் என்னும் பொருண்மையில் சிறப்புரை நிகழ்த்திய இராமசாமி தமிழ்க்கல்லூரி முதல்வர் முனைவர் நாகநாதன் கலைஞரின் பன்முகத்திறமைகளை எடுத்துரைத்ததுடன் கலைஞர் திரைத்தமிழின் சிறப்புகளையும் மாணவர்கள் மனம் கொள்ளும் வகையில் சிறப்பாக எடுத்துரைத்தார். அழகப்பா அரசு கலைக்கல்லூரித் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் துரைஇரவிக்குமார் நன்றியுரை நவில விழா இனிதே நிறைவு பெற்றது. கலைஞர் தமிழ்ப் படைப்புகள் குறித்த கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குப்பரிசுகள் வழங்கப்பட்டன. கலைஞர் மாணவர் தமிழ் மன்ற விழாவில் ஏராளமான பேராசிரியர்களும், ஆசிரியரல்லாப் பணியாளர்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக