மூவர்ணக்கொடி நிறத்தில் ரயில் இன்ஜின்.. பாம்பன் புதிய ரயில் பாலத்தை பாரத பிரதமர்.நாளை திறந்து வைக்கிறார்
இராமநாதபுரம் மாவட்ட இராமேஸ்வரம் தீவு பகுதியை இணைக்கும் ரயில் பாலம் பணிகள் முடிக்கபட்டு ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது இதனை தொடர்ந்து நாளை 06.04.2025 ஞாயிறு அன்று பாரதபிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்து நாட்டிற்கு அற்பணிக்க உள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கின்றனர். இலங்கையில் இருந்து மதுரை விமான நிலையம் வரும் பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக மண்டபம் முகாம் விமான படை ஹெலி பேட் திடலில் இறங்குகிறார்.அங்கு அவருக்கு இராமநாதபுரம் மாவட்டத்தின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் வரவேற்பு செய்கிறார். பின்னர் பாம்பன் பாலம் திறப்பு விழா மேடைக்கு கார் மூலமாக செல்கிறார். இவ்விழாவில்
மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன், மாநில அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நவாஸ்கனி, தர்மர். சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம். மற்றும் மத்திய மாநில அரசு அதிகாரிகள் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர். பிரதமரின் வருகையொட்டி பலத்த பாதுகாப்பு வளையத்தில் இராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் கடற்கரை பகுதிகளில் கடலோரகாவல்படை உச்சிப்புளி பருந்து விமானப்படை வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்கான செய்யப்படும் முனேற்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன், அதிகாரிகளுடன் பார்வையிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக