நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே முப்பெரும் விழா - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஏப்ரல், 2025

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே முப்பெரும் விழா

IMG_20250413_124951_934



நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் *தளிர்விடும் பாரதம் அறக்கட்டளையின் சார்பில் 13 ஆம் ஆண்டு துவக்க விழா,  இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா,  சமூக சேவகர்களுக்கு பாராட்டு விழா* ஆகிய முப்பெரும் விழா குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் நகராட்சி துவக்க பள்ளியில் நடைபெற்றது.  

IMG_20250413_131147_372


விழாவிற்கு *தளிர்விடும் பாரதத்தின் ஆலோசகர் முனைவர் அழ.லட்சுமணன்* தலைமை வகித்தார். *தளிர்விடும் பாரதத்தின் பொருளாளர் வரதராஜன்* அனைவரையும் வரவேற்று பேசினார். 


*ஊர் நாட்டாண்மைக்காரர் அருள்,  நகர மன்ற உறுப்பினர் இனியா ராஜு தமிழ் சிந்தனை பேரவையின் தலைவர் ரமேஷ் குமார்* ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


குமாரபாளையம் *நகர உதவி காவல் ஆய்வாளர் தங்க வடிவேல் J.K.K.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் கேப்டன் டாக்டர்.நளினி மற்றும் அசோக் கிருஷ்ணா மருத்துவமனை டாக்டர். நடராஜன்* ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.


சிறந்த சமூக சேவைக்காக குமாரபாளையம் *சித்ரா பாபு அவர்களுக்கு விடிவெள்ளி விருதும்,*  பாசம் இல்லம் *குமார் அவர்களுக்கு பாசத்தலைவன் விருதும்,*  ஈரோடு மாவட்ட ரத்ததான ஒருங்கிணைப்பாளர் *கவியரசு அவர்களுக்கு உயிர் காக்கும் உத்தமர் விருதும்* வழங்கப்பட்டது.


பள்ளி மாணவ மாணவிகளுக்கு *பேச்சுப்போட்டி,  ஓவிய போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் பதக்கங்களும்* வழங்கப்பட்டது.


நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு *இலவச மரக்கன்றுகள்* வழங்கப்பட்டது.  


நிகழ்வுக்கான ஏற்பாடுகளை *தளிர்விடும் பாதத்தின் தலைவர் சீனிவாசன், உறுப்பினர்கள் சரண்யா பிரபு மற்றும் நிதர்சன்* ஆகியோர் செய்திருந்தனர்.


நிகழ்வில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


விழாவின் முடிவில் *தளிர்விடும் பாரதத்தின்  செயலாளர் பிரபு* அனைவருக்கும் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad